தேநீரில் இஞ்சி எலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து தயாரித்தால்…
பிரியாணியில் காரம் அதிகாமானால் எலுமிச்சை பழச்சாறு, நாட்டுச் சர்க்கரை, வெல்லப்பாகு. நெய்யில் பொரித்த உலர் திராட்சை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கிளறினால்' காரம் குறையும்.
கேசரி செய்யும் போது கடைசியாக சிறிதளவு கடலை மாவை வறுத்து சேர்த்து கிளறி இறக்கினால் அசோகா டேஸ்டில் இருக்கும்.
தினமும் அருந்தும் தேநீரில் இஞ்சி எலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து தயாரித்தால் ,சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
முட்டைக்கோசை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை தயிரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு. உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் முட்டைகோஸ் தயிர் பச்சடி புது சுவையுடன் இருக்கும்.
0
Leave a Reply