பாலின் ருசி மாறாமல் இருக்க….
வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் தீய்ந்த பாலில் சூடு ஆறு முன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.
வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கவும் கண்ணும் கரிக்காது.
கிச்சன் திண்ணையில் தேவையில்லாத ஸ்மெல்,எறும்பு, பூச்சிகள் வராமலிருக்க ஒரு பாத்திரத்தில் 4 கிராம்பை தட்டி அதனுடன் 1/4ts மஞ்சள் தூள், 1 கப் தண்ணீர் கலந்து இதில் காட்டன் துணியை நனைத்து துடைத்தால் போதும்
தேனில் 4 கிராம்பை போட்டு வைத்தால் எறும்பு வராது.
காய்கறி சூப்பில் 1பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, ஒரு கைப்பிடி மல்லி இலை, 6 சின்ன வெங்காயம், பாதி தக்காளி, 1Tbs சீரகம், 10 மிளகை இடிகல்லில் இடித்து சேர்த்தால் சூப் நல்ல சுவை மணமாக இருக்கும்.
0
Leave a Reply