பிளாஸ்கினுள் துர்நாற்றம் நீங்க…
குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்,விரைவில் குணமாகும்.
கற்பூரம். பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை,மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.
பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிதளவு ரவையை வறுத்து சேர்த்து கிளறினால் கெட்டியாகிவிடும்....
வடை, அடை, தோசை செய்யும்போது சிறிது வறுத்து அரைத்த ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென இருக்கும்...
பிளாஸ்கினுள் எலுமிச்சை தோல்கள் சிலவற்றை போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவினால் துர்நாற்றம் நீங்கும்.
0
Leave a Reply