25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


புதினாவை, சமையலுக்கு பயன்படுத்தி விட்டு, அந்த காம்பை தூக்கி வெளியே வீசிடாதீங்க! இப்படி, உங்க வீட்டு தொட்டியில் நட்டு வச்ச, சீக்கிரமே புதினா செடி வளர்ந்துவிடும் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புதினாவை, சமையலுக்கு பயன்படுத்தி விட்டு, அந்த காம்பை தூக்கி வெளியே வீசிடாதீங்க! இப்படி, உங்க வீட்டு தொட்டியில் நட்டு வச்ச, சீக்கிரமே புதினா செடி வளர்ந்துவிடும் .

சமையலுக்காக, கடையிலிருந்து வாங்கி வரும், புதினாவிலிருந்து நம் வீட்டிலேயே, நம் வீட்டில் இருக்கும் சிறிய தொட்டியில் புதினா செடிகளை செழிப்பாக வளர வைத்து விட முடியும். இதுஒரு சுலபமான முறை தான். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.நான்கு இனுக்கு புதினாவை எடுத்துக் கொள்ளுங்கள் போதும். அந்த புதினா இனுக்கின், கீழ் பகுதியில் மட்டும் புதினா இலைகளை கிள்ளி எடுத்து கொள்ளுங்கள். அதாவது புதினா இனுக்கில், மேலே மட்டும் இரண்டு அடுக்கு இலைகள் இருந்தால் போதும். கீழ் பக்கமாக இருக்கும்2 அடுக்கு புதினா இலைகளை பறித்து விடுங்கள்(கீழே காம்பு மட்டும் இருக்க வேண்டும். மேலே புதினா இலைகள் லோடு சேர்த்த காம்பு இருக்க வேண்டும்.)

ஒரு டம்ளரில், புதினா இலைகளின் காம்பு பகுதி மட்டும் நீரில் மூழ்கும் அளவிற்கு, தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் அந்த நான்கு புதினா இலைகளின் காம்பு பகுதியானது தண்ணீரில் மூழ்கியபடி, பத்து நாட்கள் இருக்க வேண்டும். அப்போது அந்த காம்பு பகுதியில், புதினா இனுக்கில், வேர் விட ஆரம்பித்து விடும். புதினாவின் காம்பு பகுதியானது தண்ணீருக்குள்ளேயே இருப்பதனால், புதினா இனுக்கின் மேல் பகுதியில், இருக்கும் இலைகள் வாடாமல் பச்சை பசேலென்ற தான் இருக்கும்.

அந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரின் நிறம் மாறிவிட்டால் மட்டும், பழைய தண்ணீரை ஊற்றிவிட்டு புதிய தண்ணீர் போட்டு, மீண்டும் அந்த புதினா காம்புகளை தண்ணீரில் போட்டுவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து நன்றாக, புதினா காம்புகளில், வேர் விட்டிருக்கும். வேர் விட்ட அந்த 4 புதினா இனுக்குகளை எடுத்து, அகலமான மண் தொட்டியில், நான்கு திசைகளில், நான்கு ஓட்டையைப் (உங்கள் ஆள்காட்டி விரல் அளவுக்கு, ஒரு குச்சியை வைத்து ஓட்டை போட்டாலே போதும்.) போட்டு ஊன்றி விட வேண்டும்.

நடுவில் ஒன்று! அதாவது, ஒரு புதினா இனுக்கை நடுவதற்கும், மற்றவர்களுக்கு புதினா இனுக்கை நடுவதற்கும், கொஞ்சம் இடைவெளி விட்டு விடுங்கள். அதன் பின்பு நன்றாக தண்ணீர் ஊற்றி விட வேண்டும். ஒரே வாரத்தில் அந்த வேரானது மண்ணில் ஊன்றி உங்களது புதினா செடி நன்றாக துளிர் விட ஆரம்பித்துவிடும். இரண்டு வாரங்கள் போதும். உங்கள் செடி நன்றாக வளர்வதை பார்க்கலாம்.

மூன்றிலிருந்து நான்கு வாரம் முடிவதற்குள் நீங்கள் நட்டு வைத்த நான்கு புதினா இனுக்கு, அதிகப்படியான கிளைகளை விட்டு, படர்ந்து வளர ஆரம்பித்துவிடும். உங்கள் வீட்டில் அகலமான தொட்டி இருந்தால் இதை முயற்சி செய்து பாருங்கள்! தினமும் தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். பச்சை பசேலென்ற புதினாவை, இனி கடையில் சென்று வாங்க வேண்டாம். உங்கள் வீட்டுத் தொட்டியில் பூச்சி மருந்து இல்லாமல், இயற்கையான முறையில் வளர வைத்து, பலனடையலாம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News