25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரயில்வே  RRB  Group–D போட்டித்  தேர்வுகளுக்கான  இலவச  முழு  மாதிரித்  தேர்வுகள் 04.07.2026  மற்றும்  10.07.2026-ல் நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரயில்வே RRB Group–D போட்டித் தேர்வுகளுக்கான இலவச முழு மாதிரித் தேர்வுகள் 04.07.2026 மற்றும் 10.07.2026-ல் நடைபெறவுள்ளது.

மாவட்ட  வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தில்  செயல்படும்  தன்னார்வ  பயிலும்  வட்டம்  வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB  மற்றும்  TRB  போன்ற  தேர்வு  முகமைகளால் நடத்தப்படும்  பல்வேறு  போட்டித்  தேர்வுகளுக்கான  இலவசப்  பயிற்சி வகுப்புகள்  தொடர்ந்து  நடத்தப்பட்டு  வருகின்றது.

இரயில்வே  தேர்வு  வாரியம்  22,195  காலிப்பணியிடங்களுக்கான  RRB Group–D-க்கான  அறிவிக்கை  வெளியிடப்பட்டது.  விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும்  மையத்தில்  RRB  Group-D தேர்விற்கான  இலவசப்  பயிற்சி  வகுப்பு  09.02.2026  முதல்  நடைபெற்றது.

அதனைத்  தொடர்ந்து  விருதுநகர்  மாவட்ட  தேர்வர்கள்  RRB  Group–D தேர்விற்கு  தயாராகும்  பொருட்டு  விருதுநகர்  மாவட்ட  வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும்  மையம்  மூலமாக  இலவச  முழு  மாதிரித்  தேர்வுகள் 04.07.2026  மற்றும்  10.07.2026  அலுவலக  வளாகத்தில்  நடைபெறவிருக்கிறது.  
 இம்முழுமாதிரித்  தேர்வில்  கலந்துகொள்ள  விருப்பம்  உடையவர்கள் https://forms.gle/fQ22tTLoLsbpUq4w8 என்ற இணையதள முகவரியில்  பதிவு  செய்தோ  அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது  விருதுநகர்   மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தில்  நேரடியாகவோ  தெரிவிக்கலாம். எனவே  இரயில்வே  RRB  Group–D தேர்வர்கள்  இம்மாதிரித்  தேர்வில்  கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News