ரூ.140 செலவில் காற்று சுத்திகரிப்பான்: டெல்லி மாணவருக்கு 'டயானா விருது.
சாதாரண மின்விசிறிகளை காற்று சுத்திகரிப்பான்களாக மாற்றும் ரூ.140 மதிப்பிலான வடிகட்டியை (filter) உருவாக்கியதற்காக, புது தில்லி சம்ஸ்கிருதி பள்ளி மாணவர் கிரிஷ் அகர்வால் 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச'டயானா விருது' வென்றுள்ளார்.
தனது சக மாணவர் சமர்த் மீட்டில் என்பவருடன் இணைந்து'புராஜெக்ட் வாயு'(ProjectVayu) என்ற திட்டத்தின் கீழ் இந்த மலிவு விலை வடிகட்டியை அவர் வடிவமைத்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
செயல்பாடு: மின்விசிறிகளில் எளிதாகப் பொருத்தக்கூடிய இந்த வடிகட்டி, PM2.5 நுண் துகள்களை 90% வரை (158-லிருந்து 11 µg/m³ வரை) குறைக்கிறது.
பயனாளிகள்: இதுவரை டெல்லியில் உள்ள பின்தங்கிய பள்ளிகளின் 295 வகுப்பறைகளில் 602 வடிகட்டிகள் இலவசமாகப் பொருத்தப்பட்டு 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தை புது தில்லியின் மேலும் 45 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக வழங்கப்படும் இவ்விருது, சமூக மாற்றத்திற்காக உழைக்கும் சிறந்த இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
0
Leave a Reply