ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: அரையிறுதியில் லக்சயா சென்.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் ஜப்பானில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் 13-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்சயா சென், 17-ம் நிலை வீரரான ஜப்பானின் யுஷி டனகாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய லக்சயா, இரண்டாவது செட்டையும் 21-15 என எளிதில் வென்றார். 40 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply