ஜவ்வரிசி கிச்சடி.
தேவையான பொருட்கள் -
1 கப் ஜவ்வரிசி, 1உருளைக்கிழங்கை வேக வைத்தது,
2 பச்சை மிளகாய்,1/4 கப் பச்சை வேர்க்கடலை,
1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்,1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு,
1/2 எலுமிச்சை,தேவையான அளவுஉப்பு,3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்,
தாளிக்க - 1 டீஸ்பூன் சீரகம்,2 கொத்து கறிவேப்பிலை,சிறிதுகொத்தமல்லித் தழை.
செய்முறை -
முதலில் ஜவ்வரிசியை மூன்று முறை அலசி தண்ணீரை வடித்து விட்டு முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும்.வேக வைத்த உருளைக்கிழங்கை பொடியாக வெட்டி கொள்ளவும். மற்றவற்றை எடுத்து வைக்கவும்.
ஜவ்வரிசியில் பச்சரிசி மாவை கலந்து வைக்கவும் அதிகப்படியான தண்ணியாக இருந்தால் பச்சரிசிமாவு உறிஞ்சிக்கொள்ளும் ஜவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து வேர்க்கடலையை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் ரோஸ்ட் செய்யவும். பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வேர்க்கடலை பாதி அளவு எடுத்து பொடித்து கொள்ளவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.இப்போது கடாயில் ஜவ்வரிசியை சேர்த்து 30 நொடி கிளறவும். அதில் வேர்க்கடலை வேர்க்கடலை பொடி மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பிறகு ஒரு நிமிடம் வரை கிளறி கொத்துமல்லித்தழை தூவி இறக்கி விடலாம். எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பரிமாறும் பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். கிச்சடி பரிமாற தயார்.
0
Leave a Reply