25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


வீரதீரச் செயல் புரிந்தவர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீரதீரச் செயல் புரிந்தவர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசால், உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றும் வகையில் சிறப்பான வீரதீரச் செயல்களைப் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பாராட்டி, ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “அண்ணா பதக்கம் – வீரதீரச் செயல்களுக்கான விருது” வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2027 ஆம் ஆண்டிற்கான அண்ணா பதக்கம் பெறுவதற்கு, உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவதில் குறிப்பிடத்தக்க வீரதீரச் செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 08.12.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் இவ்விருதிற்குப் பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீரச் செயல் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அதற்கான உரிய ஆதாரங்களுடன் கூடிய பரிந்துரைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் தனித்தனியாக, அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் தெளிவான கருத்தருவாக  விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 07.12.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News