அவல் கிச்சிடி.
தேவையான பொருட்கள் -
2 கப் அவல்,1 கப் கேரட், பீன்ஸ், பட்டாணி,1வெங்காயம்,
3 பச்சை மிளகாய்,1 தக்காளி,1/2 மஞ்சள் தூள்,உப்பு தேவையான அளவு,
தாளிக்க - 1 டேபிள் ஸ்பூன் எண்ணை,1/4 டீஸ்பூன் கடுகு,1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு,
கறிவேப்பிலை,கொத்தமல்லி,
செய்முறை -
அவலை கழுவி எடுத்து உதிரியாக தட்டில் பரப்பி வைக்கவும்.
வெங்காயம், காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கி மூடிவைக்கவும்.
மூடிவைத்து வதங்கியவுடன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து, தயாராக வைத்துள்ள அவலை சேர்த்து கலக்கவும்.
எல்லாம் சேர்த்து நன்கு சூடாகும் வரை கலந்து மல்லி இலை தூவி இறக்கினால் அவல் கிச்சிடி ரெடி.
பின்னர் எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி மல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான அவல் கிச்சிடி சுவைக்கத்தயார்.
இந்த அவல் கிச்சிடி மிகவும் வண்ணமயமாக உள்ளதால் குழந்தைகள் மதிய உணவு பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பினால் ருசித்து சாப்பிடுவார்கள்.
0
Leave a Reply