25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


சிறுபான்மையின மக்களுக்கு தற்கால தேவைகளுக்கேற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுபான்மையின மக்களுக்கு தற்கால தேவைகளுக்கேற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையின (முஸ்லிம்கள், கிறித்தவர்கள். சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள்) சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள், மகளிர் மற்றும் வேலைவாய்ப்பற்ற நபர்களின்  பொருளாதார (ம) சமூக மேம்பாட்டினை உயர்த்தும் வகையில்  தற்கால தேவைகளுக்கேற்றவாறு  தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ஆடை வடிவமைப்பு, அழகு மற்றும் ஆரோக்கியம், எம்பிராய்டரி, விவசாயம், பொருட்கள் மற்றும் உற்பத்தி, கட்டுமானம், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், உணவுத் தொழில்கள், மரச்சாமான்கள் மற்றும் பொருத்துதல்கள், இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், பசுமை வேலைகள், கைவினை, சுகாதாரம், தோல், சரக்கு மேலாண்மை, சந்தைப்படுத்தல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, பிளம்பிங், எலக்ட்ரீஷியன், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், ஜவுளி மற்றும் கைத்தறி, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்  உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Skill Developement Training) வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு முஸ்லிம், கிறித்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினராக இருக்க வேண்டும். 8-ம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை பயிற்சிகளுக்கு ஏற்ப. விண்ணப்பதாரர் வயது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி வழங்கப்படும். ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சிகளுக்கு ஏற்றாற்போல் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி முழுவதுமாக முடிப்பவர்களுக்கு பயிற்சிக்கான அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

மேற்கண்ட பயிற்சிகள் பெற விரும்பும் நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 5-வது தளத்தில் (அறை எண்- 505) இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று 20.11.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News