ராஜபாளையம், ஜவஹர் மைதானம் எதிரே ஏற்பட்டுள்ள பள்ளத்தை தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
புது பஸ் ஸ்டாண்ட் சென்று வரும் பஸ்கள் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அடுத்த பஸ் ஸ்டாப் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு எடுத்து அப்பகுதி சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அனைத்துவாகனங்கள் இப் பகுதி வழியே செல்வதால், நெருக்கம் அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் குழாய் உடைப்பும் அதனால் ஏற்படும் ரோடு சேதம் நீண்ட நாட்களுக்குப் பின் சீரமைப்பு மீண்டும் குழாய் உடைப்பு என தொடர்கதையாக இருந்து வருகிறது .இந்நிலையில் அடிக்கடி சேதமாகும் - குழாய் அதனால் ஏற்படும் பள்ளம் தற்காலிக தீர்வாக வைத்து தடுப்புகளை தடை ஏற்படுவது இப்பகுதிக்கு சகஜம் ஆகிவிட்டது. நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply