வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி.
வத்திராயிருப்புநகரம்மற்றும்அதனைச்சுற்றியுள்ளகான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், சேதுநாராயணபுரம், புதுப்பட்டி, தாணிப்பாறை , மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது நெல் நடவுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி வத்திராயிருப்பில் 11.8 மி.மீ, பெரியாறு அணையில் 9.8 மி.மீ, கோயிலாறு அணையில் 12.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அணைகளுக்கான நீர்வரத்து குறைவாக உள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலையில் பெய்த மழையால் காட்டாறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
0
Leave a Reply