உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்: இந்திய பெண்களுக்கு தங்கம்.
கத்தார் தலைநகர் தோஹாவில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்' / 'ஷாட்கன்') தொடர் நடந்து வருகிறது. பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் மனுபாகர், இஷா சிங் மற்றும் திவ்யா ஆகியோர் களமிறங்கினர்.
தனிநபர் தகுதிச்சுற்று: இஷா சிங் 590 புள்ளிகளுடன் 3வது இடமும், மனுபாகர் (587) 6வது இடமும், திவ்யா (584) 10வது இடமும் பிடித்தனர்.
தங்கப்பதக்கம்: இஷா சிங், மனுபாகர் மற்றும் திவ்யா மூவரும் இணைந்து ஒட்டுமொத்தமாக 1761 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினர்.
இதேபோல், ஆண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் (587), அகில் ஷியரோன் (582), நிராஜ் குமார் (582) இடம்பெற்ற கூட்டணி 1751 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.
0
Leave a Reply