25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


“2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்டத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் அறிவியல் பூர்வமான பயிற்சியை வழங்கும் கோடைகாலப் பயிற்சி முகாமானது நடத்தப்படுகின்றது.

 இதனடிப்படையில் “2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த கோடைக்கால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

 கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் இரண்டு அமர்வுகளாக பயிற்சிகள் வழங்கப்படும்.இப்பயிற்சி முகாமில், குத்துச்சண்டை, டென்னிஸ், வளைகோல்பந்து, யோகா, தடகளம், கபாடி, கையுந்துபந்து மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.

 கோடைக்கால பயிற்சி முகாமில்  கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். கோடைக்கால பயிற்சி முகாமில் சேர விரும்புவோர் தங்களது பெயர்களை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News