விருதுநகர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, செண்பகத்தோப்பு மலைவாழ் பகுதியில் வசிக்கும் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, (07.04.2026) 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி (தனி) செண்பகத் தோப்பு மலைவாழ் பகுதியில் வசிக்கும் வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கையெழுத்து இயக்கம்:
"எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் அரசு அலுவலர்கள் மற்றும் செண்பகதோப்பு மலைவாழ் மக்கள் திரளாகக் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து, நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து, ”100 சதவீதம் முழுமையாக வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட கனிம வளம் துணை ஆட்சியர் அவர்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ஆதிந) அவர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், ஜஸ்டிஸ் பகவத் காலனி செண்பகதோப்பு மலைவாழ் மக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply