25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


2025-26-ஆம்  ஆண்டு  தீவன அபிவிருத்தி  திட்டத்தின்  கீழ்,  மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு  மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2025-26-ஆம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. 

கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிக முக்கியமாகும்.  பண்ணை  செலவினத்தில் 70  சதவீதம்  கால்நடைகளுக்கான தீவன செலவாகும். உற்பத்தி செலவினை குறைத்து, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவதற்கு , தீவனம் விரயம் ஆகுதலை குறைப்பது முக்கியமான ஒன்றாகும்.  கால்நடைகள் தீவனங்களை வீண் செய்வதை தவிர்க்க, தீவனங்களை  சிறு துண்டுகளாக  நறுக்கி  வழங்குவதற்கு,  2025-26-ஆம்  ஆண்டு  தீவன அபிவிருத்தி  திட்டத்தின்  கீழ்  மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு  விருதுநகர் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு, குறைந்த பட்சம் 2 கறவைப் பசுக்கள் வைத்திருக்க வேண்டும். மின்சார வசதி கொண்ட இறவையில் தீவன சாகுபடி செய்கூடிய வாறு, குறைந்த  பட்சம் ½ ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும்.  கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்களில் பயனாளியாக பயன்பெற்று இருத்தல் கூடாது.  சிறு குறு மற்றும் பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு  முன்னுரிமை வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி  தங்களிடம் உள்ள கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News