2027-ம் ஆண்டு 'AI ஒத்துழைப்பு ஆண்டு' – சீனா, ASEAN அறிவிப்பு.
செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2027ம் ஆண்டை'செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு ஆண்டாக' (AI Cooperation Year) சீனாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ASEAN-ம் அறிவித்துள்ளன.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற 29வது சீனா,ASEANஉச்சி மாநாட்டில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
சீனா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட ASEAN உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
AI தொழில்நுட்ப வளர்ச்சி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
2027 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆசிய நாடுகளின் கூட்டுப் பயணத்திற்கு புதிய அத்தியாயமாக அமையுமா.
0
Leave a Reply