25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விண்கல்லைக் கண்டுபிடித்த 14 வயது இந்திய சிறுவன்! நாசா அங்கீகாரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விண்கல்லைக் கண்டுபிடித்த 14 வயது இந்திய சிறுவன்! நாசா அங்கீகாரம்.

டெல்லி நொய்டாவைச் சேர்ந்த 14 வயது மாணவன் தக்ஷ் மாலிக், விண்வெளியில் புதிய விண்கல் (Asteroid) ஒன்றைக் கண்டுபிடித்து உலகளவில் சாதனை படைத்துள்ளார். இந்த அரிய சாதனையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

6-வது இந்தியர்: விண்கற்களைக் கண்டுபிடித்த இந்திய மாணவர்களின் வரிசையில் தக்ஷ் மாலிக் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்காலிகப் பெயர்: இந்தக் கல்லிற்கு தற்போது '2023 OG40' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

பெயர் வைக்கும் உரிமை: இந்த விண்கல் குறித்து நாசா இன்னும் 4-5 ஆண்டுகள் ஆய்வு செய்யும். அதன் பிறகு, தக்ஷ் மாலிக் விரும்பும் பெயரை இதற்குச் சூட்டலாம்.

மாணவனின் விருப்பம்: "இதை கண்டுபிடித்த போது நாசாவில் பணியாற்றியது போல் இருந்தது. இதற்கு 'Destroyer of the World' அல்லது 'Countdown' என பெயர் வைக்க யோசித்து வருகிறேன்" என்று தக்ஷ் மாலிக் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உலகமே பாராட்டும் இந்த 14 வயது இந்திய இளம் சாதனையாளரைப் பகிர்வோம், கொண்டாடுவோம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News