டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழைக் காலத்தை முன்னிட்டு டெங்கு மற்றும் காய்ச்சலை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் (05.10.2026) நடைபெற்றது.மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து உடனடியாக அகற்றுதல், வீடு மற்றும் பொது இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை மூடி வைத்தல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்தல் வேண்டும்.
மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் தீவிர காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள், தேவையான இடங்களில் புகைமருந்து தெளித்தல் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொசுப்புழு உற்பத்தி ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களின் கட்டிடங்களை தவறாது ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்கும் வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, இணை இயக்குநர் (மருத்துவ நலப் பணிகள்) மரு.காளிராஜ், மாவட்ட சுகாதார அலுவலர்கள், நகர்நல அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply