மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.8.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S , அவர்கள் தலைமையில்(05.10.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1 இலட்சம் வீட்டுக் கடன் மானியத்திற்கான ஆணையினையும், 17.05.2025 அன்று பெங்களூரு-நாகர்கோவில் சாலை- கரூர் மாவட்டம்- ஆத்தூரில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்த சிவகாசி வட்டத்தைச் சார்ந்த நபர்களின் குடும்ப வாரிசுதாரர் 2 நபர்களுக்கு ரூ.7.50 இலட்சத்திற்கான காசோலை என மொத்தம் ரூ.8.50 இலட்சம் நலத்திட்ட உதவிகளைமாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்வழங்கினார்.தொடர்ந்து,பொதுமக்களிடமிருந்து 646 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பொதுமக்களை இயற்கை இடர்பாடுகள், தீ விபத்துகள் மற்றும் ஆபத்துக்காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மூலம் நடத்தப்பட்ட பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.பிரம்ம நாயகம், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply