18 மாதங்கள் தலையின்றி உயிர்வாழ்ந்த சேவல்.
1945-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
இறைச்சிக்காக வெட்டப்பட்ட ஒரு சேவலின் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் அது உயிருடன் இருந்தது. பின்னர் 'மைக்' என்று பெயரிடப்பட்ட அந்த சேவலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதன் மூளைத்தண்டு சேதமடையாமல் இருந்ததால் சுவாசம், இதயத் துடிப்பு உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகள் தொடர்ந்தது தெரியவந்தது.
திரவ உணவு அளிக்கப்பட்ட அந்த சேவல் 18 மாதங்கள் உயிருடன் வாழ்ந்தது. இன்றும் அதன் நினைவாக கொலராடோவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன் ஃபெஸ்டிவல்' கொண்டாடப்படுகிறது.
0
Leave a Reply