திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பருத்தி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் பஞ்சாலை அதிபர்கள்ஆகியோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில்வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், பருத்தி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் பஞ்சாலை அதிபர்கள்ஆகியோர்களுடனானகலந்துரையாடல் நிகழ்ச்சி (17.10.2025) அன்று நடைபெற்றது. பஞ்சாலை நடத்துபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்காகஇந்தகலந்துரையாடல்நிகழ்ச்சிநடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில், பருத்தி மற்றும் பருத்தி சார்ந்த தொழில்கள் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் நடைபெறும் விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்தியாவில் மட்டும் தான் உலகத்தில் உள்ள எல்லா வகையான பருத்தி இரகங்கள் பயிரிடப்படுகின்றன.மேலும் பருத்தியின் பரப்பளவு உலக நாடுகளில் இந்தியா முதன்மை இடம் வகிக்கிறது. இருந்தாலும் பல இடர்பாடுகளினால் பருத்தியின் விளைச்சல் குறைவதாகவும் அதனால் இங்குள்ள பஞ்சாலைகள் வெளிமாநில பருத்தியை நம்பி இருப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.இந்திய பருத்தி கழக (கோயம்புத்தூர்) பொது மேலாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் இராஜபாளையதில் ஒரு பருத்தி கொள்முதல் நிலையம் ஆரம்பிக்க உள்ளதாகவும், இதற்கு குறைந்தது 3000 ஹெக்டர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட வேண்டும் எனவும், இந்த பகுதியை சுற்றி பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகள், வணிக வளாகம், சேமிப்பு கிடங்கு ஆகியவை இருக்க வேண்டும் என எடுத்துக்கூறினார். மேலும், விவசாயிகள் இக்கொள்முதல் நிலையத்தில் பருத்தியை விற்பதற்கு தரமான பருத்தியை கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கலாம். இதற்கு முன்னதாக விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டையை வைத்து கப்பாஸ் என்ற இணையதள பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
வியாபாரத்தில் உள்ள இடர்பாடகளான பருத்தியின் அதிக ஈரப்பதம், பருத்தி இழையின் குறைந்த நிளம் ஆகியவை ஆலையின் தொழிலை பாதிக்கின்றன என பஞ்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.இதில் பங்குபெற்ற விவசாயிகள் விதையின் தரம் குறைந்து காணப்படுவதாகவும், அதிகமான பூச்சி நோய்கள், அதிகமான ஆட் கூலி, அதிக செலவு ஆகியவற்றை பட்டியலிட்டனர். இதைத்தொடர்ந்து இதற்கான காரணங்களை தென்னந்திய பருத்தி அபிவிருத்தி ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானி திருமதி எம்.ஆசாராணி அவர்கள் பட்டியலிட்டார். முக்கியமாக விவசாயிகள் தரமற்ற பருத்தி விதைகளை பயன்படுத்துவதும், விதைகளை பஞ்சாலைகள் மாட்டு தீவனத்திற்கு விற்பனை செய்யும் பன்னி பருத்தி விதையை பயன்படுத்துவதால், இரகத்தின் தூய்மை இழந்து, தரமற்ற பருத்தியை கொடுக்கிறது. இந்த விஞ்ஞான பூர்வமான தகவல்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முனைவர் சங்கர் நாராயணன், முனைவர் உஷாராணி, முனைவர் வளர்மதி ஆகியோர் பருத்தி விளைச்சலை ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் அளவுக்கு பெருக்கிட உயர் தொழில் நுட்பங்களை எடுத்துக்கூறினார். மேலும் பருத்தியுடன் ஊடுபயிர் சாகுபடி செய்து மானாவரி நிலத்தில் கூடுதல் வருமானத்தை பெறலாம். சில சமயங்களில் பருவநிலை தவறும் போது ஊடுபயிர்கள் விவசாய செலவை ஈடுகட்ட பயன்படும் என்று எடுத்தும் கூறினார்கள்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் கண்டுபிடிக்கப்பட தொழில்நுட்பங்களை வேளாண்மைத்துறை மூலமாக விவசாயிகளிடம் பரவலாக்கப்படுகிறது. மேலும், பயிற்சிகள், செயல் விளக்கங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இக்கால சூழ்நிலைகளுக்கு கேற்ப இணைய தளங்கள் மூலமாகவும், கைபேசி மூலாகவும் உடனுக்குடன் தொழில் நுட்பங்கள் பரவலாக்கப்படுகிறது. நல்ல தரமான தங்களின் நிலத்திற்கு ஏற்ற சான்றளிக்கப்பட்ட பருத்தி விதைகள், ஈரப்பதம் குறைந்த சதவீதம் பருத்தி, சருகு மற்றும் தூய்மையான பருத்தி ஆகியவற்றை விவசாயிகள் அடைய தகுந்த பயிற்சி கொடுத்து விவசாயிகளின் நலனை பாதுகாத்து வளர்ச்சியை ஊக்குவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சு.ஜோதிமணி, பொது மேலாளர் திரு.ஆர்.ஜெயகுமார், முனைவர்கள் திரு.சங்கர் நாராயணன், திருமதி உஷாராணி, திருமதி வளர்மதி, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விவசாயிகள், மற்றும் பஞ்சாலை அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply