முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி தினமான 30.10.2026 முன்னிட்டு டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் இரண்டு நாட்கள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது.
எதிர்வரும் 30.10.2026 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவு தினத்தன்று, விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு இணைப்பில் கண்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 ஆகிய மதுபான உரிமஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and permit) Rules, 1981-ன்படி 29.10.2026 மற்றும் 30.10.2026 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply