அதிக சூரிய ஆற்றல் தரும் புதிய கருப்பு உலோகம்.
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர்களின் செயல்திறனை, ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பம் மூலம் 15 மடங்கு அதிகரித்துள்ளனர்.
'பெம்டோசெகண்ட் லேசர்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டங்ஸ்டன்உலோகத்தை சூரிய வெப்பத்தை அதிகம் உறிஞ்சும் கருப்பு உலோகமாக மாற்றியுள்ளனர். மேலும், அதன்மீது பொருத்தப்பட்ட சிறப்பு பிளாஸ்டிக் பாதுகாப்பு உறை, வெப்பம் வெளியேறுவதைத் தடுத்து, அதை மின்சாரமாக மாற்றும் திறனை உயர்த்துகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, கைகளில் அணியும் மின்னணு சாதனங்கள், சிறிய உணரிகள் உள்ளிட்ட குறைந்த மின் தேவையுள்ள கருவிகளுக்கு திறன்மிக்க ஆற்றல் ஆதாரமாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply