குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு 2,13,781 மாணாக்கர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டையினை (13.11.2026) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும், சுதந்திரத்திற்காக அவர்கள் ஆற்றிய பங்கினையும் இந்திய திரு நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர்கள் செயல்படுத்திய திட்டங்களையும் இளைய சமுகத்தினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 61,84,566 மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.அதனடிப்படையில் குழந்தைகள் தின விழாவினை கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் இன்று வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 111 பள்ளிகளில் பயிலும் 22,203 மாணாக்கர்கள், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 133 பள்ளிகளில் பயிலும் 14,248 மாணக்கர்கள், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 183 பள்ளிகளில் பயிலும் 37,802 மாணக்கர்கள், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 128 பள்ளிகளில் பயிலும் 13,208 மாணக்கர்கள், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 159 பள்ளிகளில் பயிலும் 35,470 மாணக்கர்கள், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 229 பள்ளிகளில் பயிலும் 31,687 மாணக்கர்கள், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 235 பள்ளிகளில் பயிலும் 18,820 மாணக்கர்கள், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 165 பள்ளிகளில் பயிலும் 27,697 மாணக்கர்கள், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 130 பள்ளிகளில் பயிலும் 12,646 மாணக்கர்கள் என மொத்தம் 1,473 பள்ளிகளில் பயிலும் 2,13,781 மாணாக்கர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தினாலும் மாணவர்களிடமிருந்து முதலமைச்சர் அவர்கள் எதிர்பார்ப்பது நல்ல ஒழுக்கத்துடன் கல்வி பயில வேண்டும் என்பதை மட்டுமே ஆகும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவ, மாணவிகளும் சிறந்த முறையில் கல்வி கற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.மேலும் இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 1,504 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 33,501 குழந்தைகளுக்கும் சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி சாந்தி, பள்ளி தலைமையாசியை திருமதி ஜமுனா ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply