25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (10.01.2026) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், (10.01.2026) கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.708 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சமீரன்,I A S., அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களைச் சார்ந்த 1,286 கிராமக்குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சார்ந்த 45 கிராம குடியிருப்புகளுக்கான தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 1,331 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டமானது ஜல் ஜீவன் மிஷன் நிதி மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.இத்திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியத்தைச் சார்ந்த 1,286 குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியத்தைச் சார்ந்த 45 குடியிருப்புகள் ஆக மொத்தம் 1,331 கிராம குடியிருப்புகள் பயன்பெற உள்ளன.இத்திட்டம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கிராம குடியிருப்புகளில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 55 லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூன்று சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்  அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தலைமை பொறியாளர் திரு.எம்.கணேஷ், மேற்பார்வை பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) திரு.ஆர்.ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News