25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ,தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்  அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ,தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(29.01.2026) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026  பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக  தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்  அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி,  வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் 28.01.2026 அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காகவும், பதிவுகளில் மாற்றங்கள் கோரியும் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது விண்ணப்பங்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்

.மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2026) வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்  அவர்கள் தலைமையில் நடைபெற்ற  ஆய்வுக் கூட்டத்தில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்களை விடுதலின்றி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தகுதியுள்ள எந்தவொரு நபரும் விடுபடக் கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும், உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும் வாக்காளர் பதிவு அலுவலர்களைக் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News