சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்..
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் 15.08.2026 சுதந்திர தினத்தன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2026 முதல் 31.07.2026 வரை), தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விபரம், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
எனவே, 15.08.2026 அன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு பயனுள்ள கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply