விருதுநகரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் சட்டமன்றத் தேர்தல்- 2026 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.
சட்டமன்றத் தேர்தல்- 2026 நடைபெறயுள்ளதை யொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கியும், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
0
Leave a Reply