13 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மூடர் கூடம் 2’
நவீன் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான ‘மூடர் கூடம்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்ட்ராயன், ஓவியா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது.
‘மூடர் கூடம் 2’ படத்தை நவீனே இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்களும் இரண்டாம் பாகத்தில் தொடர்கின்றனர். படத்தின் முதல்பார்வை வெளியாகியுள்ள நிலையில், டார்க் காமெடி, பேண்டஸி மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்த படமாக இது உருவாகி வருவதாக நவீன் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply