காதில் வரும் நோய்த்தொற்று.
காது நோய்த்தொற்று அறிகுறிகள் -
காது வலி,காதில் சீழ் அல்லது தண்ணீர் போல வடிதல்,,காது வீக்கம்,காய்ச்சல்,காது அடைப்பு.
முக்கியக் காரணங்கள் -
வெளிகாது - காதை நோண்டுவது, நீரிழிவு நோய், ஒவ்வாமை,
நடுக்காது - வைரஸ் காய்ச்சல், மூக்கில் சளி, சைனஸ் பிரச்னை, கொலஸ்டெடோமா, காதில் அடிபடுவது.
உள்காது - வைரஸ் காய்ச்சல், நடுக்காதிலிருந்து பரவும் நோய்த்தொற்று, மூளையின் அடிப்பாகத்தில் வரும் நோய்த்தொற்று.
காதில் நோய்த்தொற்று வராமல் தடுப்பது எப்படி?
காதைக் குடைவது மற்றும் இயர்பட்ஸ் வைத்துச் சுத்தம் செய்வது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மூக்கில் சளி அல்லது தும்மல் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பதால், எளிதாக நோய்த்தொற்றுகாதை அடைகிறது.
சிறுவயதில் அடினாய்டு மற்றும் டான்சில் பிரச்னையால் அடிக்கடி காதடைப்பு அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், காலப்போக்கில் காது ஜவ்வுப் பகுதி அதன் இயல்பில் மாறிRetraction எனப்படும் ஜவ்வு உள்வாங்குதல் ஏற்படுகிறது. சிலருக்கு வெளித்தோல்,நடுக்காது பகுதிக்குச் சென்று, கொலஸ்டெடோமா எனப்படும் பிரச்னை ஏற்படலாம். இந்த கொலஸ்டெ டோமா என்னும் நோய் காதின் எலும்பை அரிக்கும் மற்றும் மூளைக்கும் பரவும் என்பதால், கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
மூக்கில் சளி ஏற்பட்டால், வேகமாகச் சிந்தி எடுப்பதைத் தவிர்த்து உரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.
சிலருக்குக் காதில் temperic membrane எனப்படும் ஜவ்வில் ஓட்டை விழுந்தால் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம்.
நீரிழிவு நோய் உள்ள சிலருக்கு காது எலும்பு மற்றும் மூளையின் எலும்பில் நோய்த்தொற்று ஏற்படலாம். இதற்கு உயர் சிகிச்சை, பயாப்சி, ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன் ஆகியவை தேவைப்படும்.
காதில் வரும் நோய்த்தொற்றைப் புறக்கணிக்காதீர்கள் .
0
Leave a Reply