அனா ஹத்சிங், ஜோஷ்னா சின்னப்பா இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதிக்கு முன்னேறினர்.
இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின்முன்னணி வீராங்கனை அனாஹத் சிங் 18, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்று,. எகிப்தின் பரிதா வாலித்தை எதிர்கொண்டார்.அனாஹத் முதல் செட் 11-6 ,2 வது செட் 11-9 3வது செட் 11–5 என கைப்பற்றி., 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் சீனியர் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 49, அயர்லாந்தின் பிராயான்னே பிளைனை இரண்டாவது சுற்றில் சந்தித்தார். இதில் ஜோஷ்னா 3-1 என்ற (12– 10, 11-4, 8-11, 11-9) செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply