25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


2026-2027 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026-2027 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

சாதிப் பாகுபாடற்ற  சமூக நல்லிணக்கத்தையும்,  சமூக ஒற்றுமையினையும்  கடைபிடிக்கும்  ஊராட்சிகளை  ஊக்குவித்து  கௌரவிக்கும்  வகையில்,  தகுதி  படைத்த 10 ஊராட்சிகளுக்கு  சமூக நல்லிணக்க  ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 இதனடிப்படையில்,  2026-27-ஆம் ஆண்டிற்கான  சமூக நல்லிணக்க  ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

  இவ்விருதுக்கான விண்ணப்ப படிவத்தை tn.gov.in என்ற இணைய தளத்தில்   உள்ள https://cms.tn.go.in/cms migrated/document/forms/Social Award App26 27.pdf Link   அல்லது   இணைப்பில்  காணும்  QR code -யை ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் .

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அரசு தபால் அஞ்சல் மூலமாகவோ   31.07.2026 மாலை 06.00 மணி வரை பெறப்படும். தாமதமாக  பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S  அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *