25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


விருதுநகர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய  முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவ அலுவலர் (Medical Officer) -1, சுகாதார ஆய்வாளர்  நிலை (Health Inspector)-4, துணை செவிலியர் (Auxilary Mid Wife) (ANM)-3, மருத்துவமனை பணியாளர் (II) (Hospital Worker)-2,  ரேடியோகிராபர் (Radiographer) -2, முதன்மை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) (Senior Treatment Supervisor) (STS)-1, பாதுகாவலர் (Security Guard)-1, செவித்திறன் நிபுணர்/பேச்சுப் பயிற்சியாளர் (Audiologist/Speech Therapist)-1

மேற்காணும் பதவிகளுக்கான விண்ணப்பம், கல்வித்தகுதி வயது வரம்பு ஆகியவற்றை விருதுநகர் மாவட்ட இணையதளத்தில் (http://virudhunagar.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தப்பணி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணி நியமனத்திற்கான ஒப்பந்த பத்திரம் அளிக்கவேண்டும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இணைக்கப்பட வேண்டிய கல்வித்தகுதி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து 06.07.2026 மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறை எண்:126, முதல் மாடி, விருதுநகர் - 626 002 அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News