25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்திய அணிகள் வெற்றியுடன் தொடங்கின.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்திய அணிகள் வெற்றியுடன் தொடங்கின.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 46வது சீசன் நேற்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் தொடங்கியது. ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் என மொத்தம் 400 அணிகள் பங்கேற்கின்றன.

ஓபன் பிரிவில் ‘நம்பர்-2’ அந்தஸ்து பெற்ற இந்திய அணி, தனது முதல் போட்டியில் தாய்லாந்தை சந்தித்தது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நிஹால் சரின், 28வது நகர்த்தலில் தனடோனை வீழ்த்தி, இந்தியாவுக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

உலக சாம்பியன் குகேஷ், பரிஷ் ரஷித்தை வீழ்த்தினார். விதித் குஜராத்தி, டுபாவை வென்றார். மற்றொரு போட்டியில் அர்ஜுன் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 3.0-1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவில் ‘நம்பர்-1’ அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் போட்டியில் டொமினிகன் குடியரசு அணியை சந்தித்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய வைஷாலி, ஹம்பி, சவிதாஸ்ரீ, வந்திகா ஆகிய நான்கு பேரும் வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 4.0-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News