ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை பைனலுக்கு முன்னேற்றம்.
ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி பைனலுக்கு முன்னேறியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.) பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (டி-20) தொடரின் 10-வது சீசன் நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, பைனலுக்கு முன்னேறியது.
நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்தது. ‘பி’ பிரிவில் முதலிடம் பெற்ற இலங்கை அணி, ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தானை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 130/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 18.4 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply