உலக துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற விவான் கபூர்: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி.
கத்தார் தலைநகர் தோஹாவில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் விவான் கபூர் (120.6 புள்ளிகள்) 6-வது இடத்தையும், உதய்வீர் சிங் (120.3 புள்ளிகள்) 8-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இறுதிப்போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட விவான் கபூர், குவைத் வீரர் அப்துல் ரஹ்மான் அல்பைஹானுடன் தலா 29 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடந்த 'ஷூட்-ஆஃப்' சுற்றில் 2-3 என்ற கணக்கில் விவான் கபூர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் எதிர்வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
0
Leave a Reply