ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: காலிறுதியில் நுழைந்தனர் லக்சயா சென், ஸ்ரீகாந்த்.
ஜப்பானில் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் டியான் யான் டாங்குடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 21-8, 21-14 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், நடப்பு சாம்பியனும் உலகின் 8-ம் நிலை வீரருமான ஜப்பானின் கொடாய் நரோகாவை எதிர்கொண்டார். கடும் சவால் நிறைந்த இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 21-15, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply