25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன.

முதல் தலைமுறை வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வு:

இதன் ஒரு பகுதியாக, இன்று (09.04.2026) 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லி ஊராட்சியில், ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில், கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:

உறுதிமொழி ஏற்பு:

 "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கையெழுத்து இயக்கம்

தொடர்ந்து, எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு அனைவரும் கையெழுத்திட்டனர்.

இறுதி நிகழ்வாக, மாணவர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு சிறப்புரை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்), வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News