25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை                       மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்,  வெம்பக்கோட்டை வட்டம், துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில்  (02.07.2025) சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை வருகின்ற 07.07.2025 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.அதனடிப்படையில் இன்று அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி மற்றும் முன்னேற்பாடு பணிகள், குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News