25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆஸ்துமா நோயுள்ளவர்கள் கவனத்திற்கு...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்துமா நோயுள்ளவர்கள் கவனத்திற்கு...

முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம்.

எந்தளவிற்கு விரைவாகச் சிகிச்சை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு ஆஸ்துமா விரைவில் குணமாகும்.

வாகனம் ஓட்டும்போதும், சமையல் செய்யும்போதும், ஒட்டடை அடிக்கும்போதும் முகத்தைத் துணியால் மூடிக்கொள்வது அவசியம்.

மருத்துவரிடம் ஆஸ்துமா நோயாளிகள் தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காண்பிப்பது மிக முக்கியம்.

தவறாமல் செய்யும் நடைப்பயிற்சி மூலம் நுரையீரலின் செயல்திறனை அதிகரித்துஆஸ்துமாவின் தொல்லையை வெகுவாகக் குறைக்க முடியும்.

பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சி மிகவும் அவசியம்.

சரியாக உட்காருதல் மற்றும் தூங்கும் நிலைகளை முறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உடல் பருமன் மற்றும் தொப்பையைக் குறைக்கவும்.

மனதைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் அவசியம்.

ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே ஆரம்பிக்க வேண்டும்.

சைனஸ் மற்றும் வயிறுஎரிச்சல் போன்ற தொல்லைகளுக்குத் தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் நீராவி பிடித்துக்கொள்ளலாம்.

இன்புளூயன்ஸா, நிமோனியா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இன்புளூயன்ஸா தடுப்பூசியும், ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் நிமோனியா தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.

உள் இழுப்பான் (Inhaler) மற்றும் உள் உறிஞ்சி (Nebulizer) ஆகியவற்றை உபபோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 மூச்சுவிடும் சிரமத்திலிருந்துஉடனே நிவாரணம் கிடைக்கும். பக்கவிளைவுகள் ஏதுமில்லை. குறைந்த அளவு மருந்தே உள்ளே செல்லும்.

முடிக்குச் சாயம் (Hair dye) அடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

 நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளிக்கொணர மார்பு இயன்முறைச் சிகிச்சை தேவைப்படும். 

சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

நோய் தீவிரநிலையில் இருக்கும்போது வெந்நீர் அருந்துவது நல்லது.

காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.

அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alarm) வீட்டில் தேவை.

தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்க தயங்கக்கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News