25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மனித உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ள அவகோடா பழம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனித உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ள அவகோடா பழம்.

மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது,'அவகோடா' பழம். இது,'ஆனைகொய்யா' என்று, தமிழில் அழைக்கப்படுகிறது. மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் குவாடமாலா நாடுகளை பூர்வீகமாக கொண்டது.16ம் நுாற்றாண்டில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இருந்து,உலகம் முழுவதும் பரவியது.

இப்பழத்தில், மனித உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்,'ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்டவையும் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.கர்ப்பிணியர் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர், இதை உண்பதை தவிர்ப்பது நல்லது.

அவகேடோ பழம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, இரத்த நாளங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்.இதற்கு அவகேடோ பழத்தில் உள்ள க்ளுடாதியோன் தான் காரணம்.இது புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களையும் வெளியேற்றும்.மேலும் அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இந்த பழத்தில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலின் தினசரி இயக்கத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் உடலில் இதயம், சிறுநீரகம் போன்ற செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை பொட்டாசியம் வழங்குகிறது.

அவகேடோவில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்வதுடன், சோடியத்தால் உடலில் ஏற்படும் விளைவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

அவகேடோவில் லுடீன் மற்றும் சியாகசிந்தின் போன்ற மூலக்கூறுகள் அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த மூலக்கூறுகள் கண் பார்வையில் ஏற்படும் மாகுலர் சிதைவு செயல்முறையைத் தாமதப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News