25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >>


எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அவரைக்காய் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அவரைக்காய் .

இந்திய உணவுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறிதான் அவரைக்காய். இது சுவையானது மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. அவரைக்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இது செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. 

அவரைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.  அவரைக்காயின் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, இது இரத்த சர்க்கரை அளவைச் சீராக பராமரிக்க உதவுகிறது. 

 அவரைக்காயில் உள்ள மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசியத் தாதுக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன.

அவரைக்காயில் உள்ள சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளது.அவரைக்காயில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சத்துகளும் தேவையான அளவு இருக்கிறது. பிஞ்சு அவரைக் காயைப் பத்தியத்திற்குப் பயன்படுகிறது.
அவரைக்காயுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
அவரைக்காயைப் பயன்படுத்துவதினால் குடல் வலுப்பெறுகிறது. பசியைத் தூண்டுகிறது. பித்தத்தைச் சரிசெய்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அவரைக்காய் மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பிஞ்சு அவரை மிகவும் உடல் நலத்திற்கு உகந்தது.
இதில் நார்ப்பொருள் அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கலையும் போக்குகிறது. உடல் வலிமையை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News