25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வாழைப்பூ கட்லெட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழைப்பூ கட்லெட்

தேவையான பொருட்கள் ;

1கப் வாழைப்பூ பொடியாக நறுக்கியது,

உருளைக்கிழங்கு - 2வேகவைத்து மசித்தது

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது (அ) 1/2 டீஸ்பூன் மிளகு தூள்

1/4 டீஸ்பூன் சாட் மசாலா தூள்

வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 

1/4 டீஸ்பூன் சீரக தூள் 

கையளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது

1/2 கப் சோள மாவு கரைசல்

1கப்பிரட் தூள்,1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

தேவையானஅளவு உப்பு

தேவையானஅளவு எண்ணெய்

செய்முறை.முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வாழைப்பூ சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.வதக்கிய வாழைப்பூ உடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம்,பச் சை மிளகாய்,மல்லிஇலை சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள் மற்றும் சாட் மசாலா தூள் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்(விருப்பமெனில்துருவிய சீஸ் யை உள்ளே வைத்து உருண்டை போலவும் செய்யலாம் )

1table spoon சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து ,பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டுபொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான வாழைப்பூ கட்லெட் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News