பீட்ரூட் ஜவ்வரிசி உப்புமா
தேவையான பொருட்கள் -துருவிய பீட்ரூட் 1/4 கப், பொடியாக நறுக்கிய பீன்ஸ் 5 எண்ணிக்கை, ஜவ்வரிசி 1 கப், தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், உருளை கிழங்கு 1/4 கப் வேக வைத்து நறுக்கியது. உப்பு சுவைக்கேற்ப.
செய்முறை- ஜவ்வரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து ஒரு வெள்ளை துணியில் உலர்த்தவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பின்னர் இத்துடன் பீன்ஸ், துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் வேகவைத்த வேர்க்கடலை, உருளைகிழங்கு மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறவும். இத்துடன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து ஒன்றாக கிளறி தேங்காய் பூ தூவி பரிமாறவும்.
0
Leave a Reply