25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


4 வகை அலைகளை வெளிப்படுத்தும் மூளை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

4 வகை அலைகளை வெளிப்படுத்தும் மூளை.

 மனித  மூளையானது 4 வகையான அலைகளை வெளிப்படுத்துகிறது. மனித மூளை என்பது மின் தூண்டல் மூலம் இயக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைத்து வயது ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்களுக்கு ஏற்படும் எண்ணங்களை பொறுத்து வெவ்வேறு மூளை அலைகள் உருவாகி, அதன் உணர்வுகளை பெறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தீவிரமாக இயங்கும்போது பீட்டா அலைகளை மூளை உரு வாக்குகிறது. இந்த பீட்டா அலைகளின் அதிர்வெண் ஒரு வினாடிக்கு 15 முதல் 40 சுழற்சிகள் வரை இருக்கும். சற்று ஓய்வு நிலையில் மூளை ஆல்பா அலைகளை வெளியிடுகிறது. ஆல்பா அலைகளின் அதிர்வெண் வினாடிக்கு 9 முதல் 14 சுழற்சிகள் வரை இருக்கும். ஒரு பணியை முடித்துவிட்டு ஓய்வு நிலையில் இருக்கும்போது ஆல்பா அலைகளை வெளியிடும். தியானம் செய்யும் போது, மனம் மிகவும் ஓய்வான நிலையில் இருக்கும் போது ஆல்பா அலைகளை மூளை வெளியிடுகிறது.

மூளை வெளிப்படுத்தும் மற்றொரு அலை தீட்டா வகை அலைகள் ஆகும். இந்த வகை அலையின் அதிர்வெண் வரம்பு பொது வாக ஒரு வினாடிக்கு 5 முதல் 8 சுழற்சிகள் வரை இருக்கும். ஒருவர் பணி முடித்து ஓய்வு எடுக்கும்போதும், கனவு காண தொடங்கும்போதும் தீட்டா அலை நிலையில் இருப்பார். மூளை வெளிப்படுத்தும் மற்றொரு அலை நிலை டெல்டா ஆகும். இங்கு மூளை அலைகள் மிகப்பெரிய வீச்சு மற்றும் மெதுவான அதிர் வெண் கொண்டவை. வினாடிக்கு 1.5 முதல் 4 சுழற்சிகள் வரம்பில் இருக்கும். மூளை ஏறக்குறைய முற்றிலும் செயல் கடந்த நிலையில் அமைதியாக காணப்படும். ஞானிகள் இந்த அலை நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. பொதுவாக, இந்த 4 மூளை அலை நிலைகளும் மனித இனத்துக்கு பொதுவானவை. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News