பிரட் வெஜ் கிச்சடி (Bread Veg Kichadi).
தேவையான பொருட்கள்:
வீட் பிரட் துண்டுகள்: 8
பெரிய வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது),
தக்காளி: 1 (பொடியாக நறுக்கியது),
கேரட்: 1/4 கப் (பொடியாக நறுக்கியது),
பீன்ஸ்: சிறிது (பொடியாக நறுக்கியது),
பச்சை பட்டாணி: 2 டேபிள் ஸ்பூன்,
குடைமிளகாய்: சிறிது (பொடியாக நறுக்கியது - விருப்பப்பட்டால்,)
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு: தாளிக்க தேவையான அளவு,
கறிவேப்பிலை: ஒரு கொத்து,மஞ்சள் தூள்: 1 சிட்டிகை,
மிளகாய் தூள் / பாவ் பாஜி மசாலா: 1/2 ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப),
எண்ணெய் அல்லது நெய்: 2 டேபிள் ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு,
கொத்தமல்லி தழை: சிறிதளவு (பொடியாக நறுக்கியது).
செய்முறை:
எடுத்து வைத்துள்ள 8 பிரட் துண்டுகளை சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அல்லது விருப்பப்பட்டால் லேசாக டோஸ்ட் செய்து கொள்ளலாம்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொரிக்க விடவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகவோ அல்லது லேசாக வதங்கும் வரை வதக்கவும்.
பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து அது மசியும் வரை வதக்கிக் கொள்ளவும்.இப்போது கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மற்றும் குடைமிளகாய் ஆகிய காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள் (அல்லது பாவ் பாஜி மசாலா) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறிகள் வெந்து வரும் வரை சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
தேவைப்பட்டால் காய்கறிகள் வேக லேசாக 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து வேக வைக்கலாம்
காய்கறிகள் நன்றாக வெந்ததும், வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை அதில் சேர்க்கவும்.
பிரட் துண்டுகள் மசாலா மற்றும் காய்கறிகளுடன் நன்றாகக் கலந்து ஒTரு சேர வரும் வரை மெதுவாகக் கிளறி விடவும்.
பிரட் ரொம்பவும் குழைந்துவிடாமல், லேசாகச் சூடேறி மசாலா அதில் ஒட்டியதும் அடுப்பை அணைத்து விடலாம்.
மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கினால், சூடான மற்றும் சுவையான பிரட் வெஜ் கிச்சடி தயார். இதை அப்படியே அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
0
Leave a Reply