சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி போட்டியினை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி போட்டியினை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை (14.11.2026) வழங்கினார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றன. பொது மக்களிடையே போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், உடற்தகுதி கலாச்சாரத்தினை உருவாக்கிடும் வகையில் இன்று அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் நடத்தப்பட்டது.
உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அனைத்து பணிகளிலும் தன்னம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் பணியாற்றிட முடியும். எந்த பணியானாலும் முழு கவனத்துடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட உடல் தகுதி மிகவும் அத்தியாவசியமாகும். தினந்தோறும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டினை மேற்கொள்ள வேண்டும். இன்று நடைபெற்ற ஒவ்வொரு பிரிவு போட்டிகளிலும் வெற்றி பெற்ற 10 வீரர்களுக்கு முதல் ரூ.5,000/, இரண்டாம் பரிசாக ரூ.3,000/-, மூன்றாம் பரிசாக ரூ.2,000/- மற்றும் 4 முதல் 10வது இடங்களை வருபவர்களில் ஒரு நபருக்கு தலா ரூ.250/- என பரிசுகள் வழங்கப்பட்டது.இப்பரிசுகள் அனைத்தும் வெற்றி பெற்றவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு இணையவழி வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கப்படும். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன் உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply