சோள ரவை கிச்சடி.
தேவையான பொருட்கள் -
200 கிராம் சோளம்,10 சாம்பார் வெங்காயம்,1 கேரட்,
3 பச்சை மிளகாய்,உரித்த பச்சைப் பட்டாணி சிறிதளவு,
இஞ்சி சிறிதளவு,உப்பு தேவையான அளவு,5பீன்ஸ்,தேவையான அளவு எண்ணெய்,கடுகு
உளுத்தம்பருப்பு சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு.
செய்முறை -
சோளத்தை ஒரு கடாயில் போட்டு லேசாக வறுக்கவும் ஆறியபின் மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு உடைத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், இஞ்சி பச்சை மிளகாய், கேரட்,பீன்ஸ் ஆகியவற்றை கட் பண்ணி வைக்கவும்.
கடாயை அடுப்பில் ஏற்றி சூடானதும் எண்ணெய்ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு போட்டு பொரிந்ததும் கட் பண்ணி வைத்துள்ள காய்கறிகள் பட்டாணி கருவேப்பிலை போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் 500 மில்லி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.ஐந்து நிமிடங்கள் தண்ணீர் கொதித்து காய்கறிகள் வெந்ததும் சோள ரவையை தூவி கரண்டியால் கிளறவும்.
நன்றாக வெந்து கிச்சடி பதத்திற்கு வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து அணைக்கவும் இப்போது சோள ரவா கிச்சடி தயார்.
சோளத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது மருத்துவ குணம் அடங்கியுள்ளது. எலும்புகள் வலிமை பெறவும் எலும்புகள் தேய்மானத்தை தடுக்கவும் சோளம் பெரிதும் உதவுகிறது.
0
Leave a Reply